மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடலில் தலை மட்டும்தான் இருந்துச்சு..! மீதி எல்லாம் எலும்பு கூடா இருந்துச்சு..! 2 நாள் வீட்டிற்கு வராதவரை தேடிய போது பார்த்த பயங்கரம்.!
கேரளாவில் பழங்குடியின கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவரை புலி வேட்டையாடி தலையை மட்டும் விட்டுவிட்டு உடல் பாகங்கள் முழுவதையும் தின்ற சம்பவம் பெரும் சோகத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு பகுதியை அடுத்த புல்பள்ளி அருகிலுள்ள பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். வெளியே சென்ற இவர் கடந்த இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
உடனே இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து ஊர் மக்கள் உதவியுடன் சிவகுமாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் ஒரு இடத்தில் இரத்த கறை இருப்பதை கண்டறிந்த போலீசார் அருகில் சென்று பார்த்தபோது அந்த இடத்தில் ஏதோ ஒன்று இழுத்து செல்லப்பட்டிருப்பதை பார்த்தனர்.
அதனை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது தலை மட்டும் மிஞ்சிய நிலையில் சிவகுமார் எலும்பு கூடாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தலையை வைத்து அது சிவகுமார்தான் என்பதை கிராமத்தினர் உறுதி செய்தனர். இரைக்காக அவரை புலி வேட்டையாடியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வனப்பகுதியில் சுற்றி திரியும் புலியை பிடிக்க வனத்துறையினர் முயன்றுவருகின்றனர். அதேநேரம், இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பழங்குடியின மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.