மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ: பார்க்கும்போதே பதறுது!! குழந்தையை நோக்கி சீறிவந்த 8 அடி நீள ராஜநாகம்!! வைரலாகும் வீடியோ..
வீட்டிற்குள் நுழைந்த 8 அடி நீள ராஜநாகத்திடம் இருந்து குழந்தையை அதன் தந்தை காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
வியட்நாம் நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தை ஒன்று வீட்டின் முற்றத்தில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருக்க, குழந்தையின் அருகே குழந்தையின் தாத்தாவும், தந்தையும் நின்றுகொண்டிருந்தனர். அப்போது குழந்தையின் தாத்தா எதையோ பார்த்து பயப்பட, 8 அடி நீள ராஜநாகம் ஒன்று குழந்தையை நோக்கி வேகமாக வந்துள்ளது.
உடனே சுதாரித்துக்கொண்ட குழந்தையின் தந்தை குழந்தையை வேகமாக தூக்கினோடு வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக்கொள்கிறார். இதனிடையே வேகமாக வந்த ராஜநாகம் வீட்டிற்குள் செல்ல முயற்சிக்கிறது. ஆனால் கதவு சாத்தப்பட்டதால் அதனால் வீட்டிற்குள் செல்லமுடியாமல் பின்னர் அங்கிருந்து செல்கிறது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.