#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணத்திற்கு பின்னும் காதலை கைவிட மறுத்த 19 வயது மகள் கொடூர கொலை; தந்தை வெறிச்செயல்.!
காதலை கைவிட மறுத்த மகள் கொலை செய்யப்பட்ட சோகம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம், முசத்துரு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 45). இவரின் 19 வயது மகள் அர்சிதா. இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வந்தபோது, அப்பகுதியை சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்னடைவு கொண்ட நபரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் பல இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த அர்சிதாவின் தந்தை ரவி, மகளை காதலை கைவிடக்கூறி கண்டித்து இருக்கிறார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மகளை, 40 வயதாகும் சுப்பிரமணி என்பவருக்கு வலுக்கட்டாயப்படுத்தி கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார். அர்சிதா தனது கணவரை உடல் ரீதியாக நெருங்க விடாமல் இருந்துள்ளார்.
குறைந்த வயது என்பதால் நாட்கள் பட்டால் புரிந்துகொள்வார் என சுப்பிரமணி அமைதி காத்தும் பலனில்லை. அர்சிதா தனது காதலரை யாருக்கும் தெரியாமல் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, தனது மாமனார் ரவிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அவர் தனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்து கண்டிக்க, அர்சிதா தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
இதனையடுத்து, மகளை அங்குள்ள வயல்வெளி பகுதிக்கு அழைத்துச்சென்ற ரவி, கொலை செய்து உடலை எரித்துள்ளார். பின் மகள் மாயமானதாக நங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தியும் முன்னேற்றமில்லை.
இறுதியாக ரவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது உண்மை அம்பலமாகியுள்ளது. ரவியை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.