மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பனின் ஆசனவாயில் ஏர் ஹோஸை திணித்து காற்றை நிரப்பிய நட்பு.. நடந்த கொடூர மரணம்.!
நகைச்சுவைக்காக செய்யப்பட்ட காரியம், நண்பரின் இறுதி காரியமாக அமைந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆசனவாயில் காற்றை அனுப்பி நண்பரின் உயிரை பறித்த கொடூரம் கல்கத்தாவில் நடந்துள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டம், புரூக் ஜுவேட் ஆலையில் பணியாற்றி வருபவர் ரஹ்மத் அலி. இவர் கடந்த நவ.16 ஆம் தேதி பணிக்கு சென்ற நிலையில், வழக்கம்போல தனது பணியை செய்துகொண்டு இருந்துள்ளார். இவர் ஆலையை சுத்தம் செய்யும் தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
நவ. 16 ஆம் தேதி இவருடன் பணியில் இருந்த ஊழியர்கள், ரஹ்மத் அலியை பிடித்து ஆசனவாயில் ஏர் பம்பை செலுத்தி காற்றை அனுப்பியுள்ளனர். ஊழியர்களிடம் இருந்து ரஹ்மத் அலி தப்பிக்க முயற்சித்தும் பலனில்லாமல் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. ரஹ்மத் அலியின் ஆசனவாயில் காற்று செலுத்தப்பட்ட சில நொடிகளில் அவரின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பின்னர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். ஆசனவாயில் காற்றை செலுத்தியதால் ரஹ்மத் அலியின் கல்லீரல் உட்பட பிற உறுப்புக்கள் சேதமாகி, 10 நாட்கள் சுயநினைவின்றி இறுதியில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக ரஹ்மத் அலியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ரஹ்மத் அலியின் ஆசனவாயில் காற்றை செலுத்திய ஷேக் சதா கான் என்பவனின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மரணம் குறித்து ஆளை நிர்வாகம் எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வரும் நிலையில், இழப்பீடு வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.