மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரள மாநில பேருந்தில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்க, செல்போனில் பேச தடை..!
மத்திய அரசு இரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சத்தமாக பேசுதல், பாடல் கேட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டு, பிற பயணிகளை தொந்தரவு செய்வதற்கு தடை விதித்து இருந்தது.
இந்நிலையில், கேரள மாநில அரசு பேருந்துகளிலும், பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுதல் மற்றும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் தொடர்பாக அம்மாநில போக்குவரத்து கழகத்திற்கு புகார்கள் வந்துள்ளது.
இந்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ள கேரள அரசு போக்குவரத்து கழகம், பயணிகள் செல்போனில் சத்தமாக பேசினாலோ அல்லது பாடல் கேட்டாலோ, அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்த தகவலை தெரிவிக்க, அதற்கான அறிவிப்பு பலகையை பேருந்துகளில் பதிவு செய்ய வேண்டும் எனவும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.