இப்போது கூடவா! கொரோனா மதம் பார்ப்பதில்லை! ஆவேசமாகி நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவு!



kushbu-tweet-about-religion-controvarsy-5RKWSF

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பரவிய நிலையில் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த மார்ச் 1 முதல் 15-ம் தேதி வரை டெல்லியில் தப்லிக் ஜமாத் சார்பில் மத வழிபாடு மற்றும் சொற்பொழிவு மாநாடு  நடைபெற்றது. இதில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில் தற்போது அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்துகொள்ள  கோரிக்கை விடபட்டுள்ளது.

kushbu

இந்நிலையில் குறிப்பிட்ட மதத்தினால்தான் அதிகமாக கொரோனா வைரஸ் பரப்புவதாக சமூக வலைதளத்தில் பதிவுகள் வைரலானது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள், கண்டனம் கிளம்பி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் இந்தக் காலகட்டத்தில் அனைத்து மத ஒன்றுகூடல்களும் மனிதன் உருவாக்கிய பேரழிவுகள். கொரோனா வைரஸுக்கு மதம் கிடையாது. அது ஜமாஅத்தோ, உத்திர பிரதேசமோ, கேரளாவோ எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் தவறுதான். நெருக்கடியான காலகட்டத்தில் கூட மதத்தைத் தாண்டி சிந்திக்காததது மக்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.