ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
திடீரென பூமிக்கு மேலே எழும்பிய நிலம்!! இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ காட்சி!!
நிலத்தின் ஒரு பகுதி திடீரென ஒரு ஆற்றின் மேலே உயர்ந்துவரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஹரியானாவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் மழை பெய்த பிறகு இந்த நிகழ்வைப் பார்த்த ஒரு பார்வையாளர் இதை தனது தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், நீருக்கடியில் மூழ்கிய நிலம் திடீரென தண்ணீருக்கு மேலே சில அடி உயர்ந்து இடிந்து விழுவதைக் காணலாம்.
பேஸ்புக்கில் முதன்முதலில் வெளிவந்த இந்த வீடியோ ஆறு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 61 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளுடன் வைரலாகியுள்ளது. வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கமெண்டுகளை இணையத்தில் பதிவிடுவருகின்றனர். இதோ அந்த வீடியோ. அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்..