மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தான்சானியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நிலச்சரிவு.. இதுவரை 63 பேர் பலி..!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான வடக்கு தான்சானியாவில் ஹன்னா மலைக்கு அருகில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த வீடுகள், சாலைகள், மற்றும் பாலங்கள் போன்றவை அடித்து செல்லப்பட்டுள்ளன.
இந்த திடீர் வெள்ளத்தால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 63 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் 8ற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உள்ள பொதுமக்களை மீட்பதற்காக ராணுவம் மற்றும் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் சிறிது தொய்வு ஏற்படுவதால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் தான்சானியாவின் ஜனாதிபதி வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.