லிவிங் டு கெதர் சோகம்... காதலனை கொடூரமாக கொலை செய்த காதலி... வெளியான திடுக்கிடும் உண்மை.!



living-together-tragedy-the-girlfriend-who-brutally-kil

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்த  கேரளாவைச் சார்ந்த இளைஞர் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது காதலி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகா என்பவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வரும் ஜாவித் என்பவரை காதலித்து வந்தார். ஜாவித் மொபைல் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுத்து பெங்களூர் அக்ஷயா அடுக்குமாடி குடியிருப்பில் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தனர்.

Indiaஇவர்களது வாழ்க்கை சுமுகமாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஜாவித் வேறொரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்தது தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இருவருக்கும் இடையே  ஜாவித்தின் தோழி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

Indiaஅப்போது ஆத்திரமடைந்த ரேணுகா அருகில் இருந்த கத்தியை எடுத்து ஜாவீத் நெஞ்சில் சராமாரியாக குத்தி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜாவித் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தனது தவறை உணர்ந்து கதறி அழுதிருக்கிறார் ரேணுகா. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  இறந்த காதலன் ஜாவித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ரேணுகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்