மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தனியார் உணவகத்தில் குளிர்பானம் கேட்ட இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பின் நடந்தது என்ன??
இந்தியாவின் பல முக்கிய இடங்களில் பிரபல உணவு நிறுவனமாகத் திகழ்ந்து வருவது McDonalds. அகமதாபாத்தில் அமைந்துள்ள அந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றுள்ளார். அங்கு உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்ட அவர் குளிர்பானம் கேட்டுள்ளார்.
அப்போது குளிர்பானம் கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை அவர் குடிக்க போனபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த குளிர்பானத்தில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு பேரதிர்ச்சி அடைந்த அந்த நபர் உடனே இதுகுறித்து போலீஸாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உணவகத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் உணவகத்தை முழுவதும் சோதனை செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Here is video of this incidents happens with me...@McDonalds pic.twitter.com/UiUsaqjVn0
— Bhargav joshi (@Bhargav21001250) May 21, 2022