பார்க்கும்போதே நடுங்குது!! எவ்வளவு பெரிய ராஜநாக பாம்பு!! முதன்முறையாக படம் பிடிப்பு.. வைரல் வீடியோ.



Longest king cobra found in Himachal Pradesh viral video

மிக பெரிய ராஜநாகம் ஒன்று ஹிமாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

அதிக விஷம் கொண்ட பாம்புகளில் மிகவும் கொடியது ராஜநாகம். பாம்புகளையே உணவாக உட்கொள்ளும் இந்த பாம்பானது அதிகபட்சம் இது சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை நீளம் வரை வளரக்கூடியது.  இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% .

பொதுவாக இந்த பாம்புகள் 12 முதல் 13 அடி நீளம் வரை வளருகின்றன. 6 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கின்றன. இவற்றில் தென் தாய்லாந்து நாட்டில் உள்ள நக்கோன்-சி-தம்மாரத் மலையில் பிடிபட்ட ஒரு ராஜநாக பாம்பு 18.5 அடி நீளம் இருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் மிக பெரிய ராஜநாக பாம்பு ஒன்று ஹிமாச்சல பிரதேசத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.