மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வறுமையில் வாடிய நபருக்கு ஒரே நாளில் அடித்த ஜாக்பாட்.! சைக்கிளில் சென்ற நபருக்கு ஒரே நாளில் 2 கோடி!!
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சஜிமோன் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து வறுமையில் இருந்த சஜிமோன் தனது குடும்பத்தை காப்பாற்ற லாட்டரி சீட்டுகளை விற்றுவந்துள்ளார். சைக்கிள் ஒன்று மூலமாகவே பல பகுதிகளுக்கு சென்று லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளில் 4 சீட்டுகள் மட்டும் விற்பனையாகமல் இருந்துள்ளது.
தன்னிடம் இருந்த 4 லாட்டரி சீட்டுகள் விற்பனையாகவில்லையே என்ற மனவருத்தத்தில் இருந்த அவருக்கு பேரதிர்ஷ்ட்டம் அடித்துள்ளது. அதாவது அவரிடம் இருந்த 4 லாட்டரி சீட்டுகளில் ஒரு லாட்டரி சீட்டுக்கு ரூ 2 கோடி பரிசு விழுந்துள்ளது. தனக்கு லாட்டரி சீட்டில் விழுந்த பணத்தை வைத்து என் குடும்பத்தை மேம்படுத்துவேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சஜிமோன்.