திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போலீஸ் போல நடித்து வேலை வாங்கித் தருவதாக மோசடி.. காதல் ஜோடி கைது!
ரயில்வே மற்றும் காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் போலீஸ் போல நடித்து ரயில்வே மற்றும் காவல் துறையில் வேலை வாங்கி தருவதாக பல இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார்.
மேலும், இதற்கு உடனடியாக ரமேஷின் காதலியும் இருந்துள்ளார். அதன்படி இதுவரை சுமார் 30 இளைஞர்களிடம் இருந்து 3 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். இதனையடுத்து யாருக்கும் வேலை வாங்கி தராததால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தி கொண்டு காவலர் சீருடையில் சுற்றித்திரிந்த ரமேஷ் மற்றும் அவரது காதலி இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விசாரணையில் ரமேஷுக்கு ஏற்கனவே 2 திருமணமாகி இருப்பதாகவும், வேலை கிடைக்காத இளைஞர்களை குறி வைத்து மோசடி செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.