மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்., காதலியை குக்கர் மூடியால் அடித்துக்கொலை செய்த காதலன்!!
பெங்களூருவில் லிவிங் டு கெதரில் உறவில் இருந்த காதலியை குக்கர் மூடியால் அடித்துக் கொலை செய்த காதலன்.
கேரளாவை சேர்ந்த வைஷ்ணவ் மற்றும் தேவி இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதனால் இருவரும் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இருவரும் லிவிங் டுகெதர் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேவி வேலை செய்யும் இடத்தில் வேறொரு நபருடன் பேசுவது குறித்து ஏற்பட்ட சந்தேகத்தால் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினத்தன்று வைஷ்ணவ், தேவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வைஷ்ணவ் வீட்டிலிருந்த குக்கர் மூடியை எடுத்து தேவியை அடித்தே கொலை செய்துள்ளார்.
அதன் பின் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வைஷ்ணவ் செல்போன் எண்ணை வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.