திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
14 வயதில் பூத்த காதல்!.. பெற்றோருக்கு பயந்து காதலர்கள் எடுத்த முடிவு!.. இறுதியில் நிகழ்ந்த சோகம்..!
திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் சிறுமி பலியானார். அவரது காதலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் குருபரஹள்ளியை வசிப்பவர் ஆனந்த். இவரது மகள் அனுஸ்ரீ (14). இவர் அந்த பகுதியில் இருக்கும் பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். சூளகிரி அருகே இருக்கும் எர்ரண்டப்பள்ளியில் வசிக்கும் சவுந்தரராஜன் (22) அனுஸ்ரீயின் உறவினர் ஆவார். எனவே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அனுஸ்ரீயை சவுந்தரராஜன் கடத்தியுள்ளார்.
இது குறித்து கர்நாடக மாநிலம் வெங்கல் காவல் நிலையத்தில், கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் தங்களை காவல்துறையினர் தேடுவதை அறிந்த சவுந்தரராஜன், அனுஸ்ரீ இருவரும் சூளகிரி அருகில் இருக்கும் எர்ரண்டப்பள்ளியில் உள்ள சவுந்தரராஜன் வீட்டில் கடந்த 26-ஆம் தேதி இரவு விஷம் குடித்தனர்.
இது தெரிந்த உறவினர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருதினங்களுக்கு முன் அனுஸ்ரீ உயிரிழந்தார். சவுந்தரராஜன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அனுஸ்ரீயின் தாய் மஞ்சுளா சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.