மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம்.. காதலன் செய்த கொடூர சம்பவம்!
உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் வசித்து வருபவர் ரிங்கு. இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் நெருங்கி பழகி வந்த நிலையில், இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்கு அந்தப் பெண்ணும் சம்மதம் தெரிவித்த நிலையில், நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது. இதனையறிந்த ரிங்கு தான் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதனையடுத்து தனது காதலியை சந்தித்து பேச முடிவு செய்துள்ளார்.
அதன்படி, இவர்கள் இருவரும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் தனிமையில் சந்தித்துக் கொண்டு பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ரிங்கு தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து இளம்பெண்ணின் கையை வெட்டியுள்ளார்.
இதில், அந்த பெண்ணின் கை துண்டானதால் வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளார். இதனையடுத்து அவரது அழகு சுத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை விட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே எந்த சம்பவம் குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ரிங்குவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்த பெண்ணின் கையை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.