மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலிக்கு போலீஸ் சீருடை அணிவித்து கோடியில் மாமூல் வசூலித்த காதலன்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் சி ஆர் பிஎப் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார் ஹனுமந்த் ரமேஷ்(45) என்ற நபர். இந்நிலையில் சில ஒழுங்கின நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தால் பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார். அதனையடுத்து ரமேஷ் தனது சொந்த ஊரான பெந்துர்த்திக்கு சென்று வசித்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரின் காதல் உல்லாச வாழ்க்கைக்கு பணம் தேவைப்படவே அதனை குறுக்கு வழியில் பெற முயன்றுள்ளனர். அதற்காக ரமேஷ் காதலிக்கு எஸ்ஐ சீருடையை அணிவித்து பொது இடங்களுக்கு சென்று அங்கு உள்ள ரோட்டோர கடைகள், மளிகை கடைகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் என அனைவரிடமும் மாமூல் வேட்டை நடத்தி அதில் வரும் பணத்தை வைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி வேலையில்லா இளைஞர்களிடம் ரயில்வே போலீஸ் மற்றும் காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 30 பேரிடமிருந்து 3 கோடிக்கு மேல் வசூலித்துள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து பணம் கொடுத்த இளைஞர்களுக்கு இவர்கள் தங்களது பணத்தை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து ரமேஷ் மற்றும் அவரின் காதலி குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
பின்னர் போலீசார் தனிப்படை அமைத்து தகுந்த ஆதாரங்களை சேமித்து அந்த மோசடி நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ரமேஷ்க்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனது தெரிய வந்தது. அவர்களை கை விட்டு விட்டு காதலியுடன் இணைந்து மோசடி வேலைகளை செய்து உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது. போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.