டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான காதலர்கள்... இடையில் வந்த 2 வது காதலுக்காக.... காதலன் செய்த கொடூர செயல்..!!



Lovers who met through a dating app... For the 2nd love that came in between.... The boyfriend committed a cruel act..

பெங்களூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அர்ச்சனா என்ற பெண் தவறி விழுந்து இறந்தார் என்று, முதலில் தற்கொலை என பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கு, விசாரணையில் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என தெரியவந்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆதேஷ். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் அர்ச்சனா தீமன் (28). இவர் விமான பணிபெண்ணாக வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில் ஆதேஷும், அர்ச்சனாவும் ஒரு டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி, இருவரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆதேஷ் வேறு ஒரு பெண்ணை காதலிக்க தொடங்கியுள்ளார். 

இந்நிலையில் அர்ச்சனா ஆதேஷை சந்திப்பதற்காக துபாயில் இருந்து பெங்களூரு வந்துள்ளார். அதன் பின்னர் அர்ச்சனா, ஆதேஷ் தங்கியுள்ள கோரமங்களா மல்லப்பா ரெட்டி லே அவுட்டில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு  வந்துள்ளார்.

அர்ச்சனா, அன்று நள்ளிரவு 12 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து இறந்தார் என்று, காவல் துறையினர், முதல் கட்ட விசாரணையில் தற்கொலை என வழக்கு பதிவு செய்தனர். 

ஆனால் அர்ச்சனாவின் பெற்றோர் மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறினர். இதையடுத்து காவல்துறையினர் ஆதேஷை மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். 

காவல்துறையினரின் விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதிப்பது எளிதான ஒன்றல்ல என்பது தெரிய வந்ததை தொடர்ந்து ஆதேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அர்ச்சனாவுடன் தகராறு ஏற்பட்டதை ஆதேஷ் ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்த அன்று ஆதேஷும், அர்ச்சனாவும் சினிமா பார்க்கச் சென்றுள்ளனர். அதன் பின்னர் இருவரும் பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பியுள்ளனர். 

வீடு திரும்பியதும் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆதேஷ் தன்னை ஏமாற்றி விட்டதாக அர்ச்சனா கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆதேஷ் அர்ச்சனாவை அவரது பிளாட்டில் இருந்து கீழே தள்ளியுள்ளார். 

இதில் அர்ச்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, அதன் பின்னர் தீவிர விசாரணையில் கொலை வழக்காக மாற்றப்பட்டது.