திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
15 வயது சிறுமியிடம் மக்கள் மத்தியில் 15 பேர் அத்துமீறல்.. பேரதிர்ச்சி சம்பவம்.. கண்காட்சியில் துயரம்.!
கண்காட்சிக்கு வந்த சிறுமியிடம் 15 பேர் கும்பல் மக்கள் முன்னிலையில் அத்துமீறிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிராஜ்புர் மாவட்டம், சரோரா பஜீரியா பகுதியில் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு அங்குள்ள மற்றொரு கிராமத்தை சேர்ந்த சிறுமி தனது நண்பருடன் வந்துள்ளார். இந்த திருவிழா ஒருதரப்பு மக்களால் நடத்தப்படுகிறது என்று தெரியவருகிறது.
அப்போது, நிகழ்விடத்தில் இருந்த அந்த தரப்பு, 15 வயது சிறுமியை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. மேலும், மக்கள் மத்தியிலேயே சிறுமியிடம் அத்துமீறுவது போன்ற கொடூர செயல்களையும் செய்து இருக்கிறது.
இந்த சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில், வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதால் சர்ச்சை உருவானது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 15 பேரை அதிரடியா கைது செய்துள்ளனர்.