மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவர்களுக்கு இடையேயான சண்டையில் பயங்கரம்: 108 முறை காம்பஸால் குத்தி கொடூரம்..!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில், நான்காம் வகுப்பு பயின்று வரும் மாணவனை, வகுப்பில் பயின்று வரும் 3 மாணவர்கள் சேர்ந்து 108 முறை காம்பஸால் குத்திய சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதமானது முற்றியதால், கம்பசால் மூன்று மாணவர்களும் சேர்ந்து சம்பந்தப்பட்ட மாணவரை சரமாரியாக குத்தி இருக்கின்றனர்.
கடந்த நவம்பர் 24ம் தேதி மதியம் 2 மணியளவில் இவ்விவகாரம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மாணவர் பள்ளி நிர்வாகத்தால் விடுப்பில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு சென்ற மகன் தந்தையிடம் நடந்ததை கூறவே, அவருக்கு உண்மை தெரியவந்துள்ளது. பின் மகனை மருத்துவமனையில் அனுமதித்தவர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால், விசாரணை நடந்து வருகிறது.
குழந்தைகள் நலத்துறையினரும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் சிசிடிவி காணொளிகளை பெற்றோர் தரப்புக்கு வழங்க மறுப்பதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மாணவரின் தந்தை தெரிவித்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.