மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி மாணவி உடைமாற்றுவதை வீடியோ எடுத்து மிரட்டிய முன்னாள் மாணவர்கள் கும்பல்; பதறவைக்கும் சம்பவம்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் ஐ.டி.ஐ கல்லூரியில் பயின்று வரும் மாணவ - மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் பயின்று வரும் முன்னாள் மாணவர்கள் ராகுல் யாதவ், குஷ்பூ தாகூர், அயன்.
கடந்த செப் 17 ம் தேதி இவர்கள் மூவரும் கல்லூரிக்கு வந்திருந்த நிலையில், அங்கு தற்போது பயின்று வரும் மாணவி உடையை மாற்ற கழிவறைக்கு சென்றுள்ளார். இதனைகவனித்த 3 பேரும் பெண் உடை மாற்றுவதை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், மாணவியிடம் இதனை காண்பித்து மிரட்டிய கும்பல், பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
இதனால் பயந்துபோன பெண்மணியும் ரூ.500 பணம் கொடுத்த நிலையில், கூடுதல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும், பணம் கொடுக்க தவறினால் விடியோவை உனது உறவினர்கள், பெற்றோருக்கு அனுப்பி வைத்து இணையத்தில் வெளியிடுவோம் எனவும் மிரட்டி இருக்கின்றனர்.
கல்லூரி மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்க, இவரைப்போல பாதிக்கப்பட்ட மற்றொரு மாணவியும் விஷயத்தை தெரிவித்துள்ளார். இரண்டு மாணவிகளும் செய்வதறியாது திகைத்த நிலையில், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்துள்ளனர்.