மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
4 செ.மீ நீளமுள்ள ஹேர்பின்னை விழுங்கிய சிறுமி.. அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த மருத்துவர்கள்.!
ஹேர்பின்னை விழுங்கிய சிறுமி 3 நாட்கள் கழித்து வலி தாங்க இயலாமல் பெற்றோரிடம் தெரிவித்ததால் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் வசித்து வரும் சிறுமி, ஹேர்பின்னை எதிர்பாராத விதமாக விழுங்கி இருக்கிறார். இந்த ஹேர்பின் சிறுமியின் சுவாச குழாயில் சிக்கிக்கொண்டுள்ளது.
இதனை பெற்றோரிடம் தெரிவித்தால் அவர்கள் அடிப்பார்கள் என்று எண்ணிய சிறுமி, ஏதும் கூறாமல் இருந்துள்ளார். இதற்கிடையே சிறுமிக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதையடுத்து, 3 நாட்கள் பின்னர் வலி பொறுக்க இயலாமல் நடந்ததை கூறியுள்ளார்.
இதனால் அதிர்ந்துபோன பெற்றோர் சிறுமியை போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். ஆபத்தான கட்டத்தில் இருந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், 4 செ.மீ நீளமுள்ள ஹேர்பின்னை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். இதனையடுத்து, சிறுமி மற்றும் அவரின் பெற்றோர் நிம்மதி அடைந்து நன்றி தெரிவித்தனர்.