மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாடே அதிர்ச்சி.. சொந்த மகளை சீரழித்து, கொன்று பிணத்துடன் உறவு கொண்ட மாற்றுத்திறனாளி தந்தை.. வனப்பகுதியில் பயங்கரம்.!
14 வயதாகும் மகளை சீரழித்த தந்தை, அவரை கொலை செய்து மீண்டும் பிணத்துடன் பாலியல் உறவு கொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள குணா மாவட்டம், ஜைடா டோன்கர் கிராமத்தில் வசித்து வருபவர் திலீப் சிங் பிஹல் (வயது 40). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 14 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில், தனது மகளை காணவில்லை என்று பஜ்ரங்கர் காவல் நிலையத்தில் திலீப் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், சிறுமி அவரின் தந்தையான திலீப்புடன் இருந்தார் என தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் திலீப்பிடம் விசாரணை செய்தபோது, மகளை கடத்தி கொலை செய்து சடலத்துடன் உறவு வைத்துக்கொண்ட பகீர் சம்பவம் அம்பலமானது. இதனையடுத்து, திலீப்பை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்த வாக்குமூலத்தில், "திலீப்பின் 14 வயது மகள் தந்தை பேச்சை கேட்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு நடந்துள்ளது. மகளின் பருவ வயதில் இயல்பான நடவடிக்கை என்பதை உணர மறுத்த திலீப், மகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவத்தன்று மகளை இரவு நேரத்தில் கிராமத்திற்கு அருகேயுள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்று, அங்கு பாலியல் பலாத்காரம் செய்து தப்பி செல்ல முயற்சித்து இருக்கிறான். சிறுமி உறவினர்களை அழைத்து வருகிறேன் என சண்டையிட, ஆத்திரமடைந்த திலீப் காட்டிற்குள் கிடந்த கட்டையை எடுத்து மகளை அடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், உயிரிழந்த மகளின் சடலத்தை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து வந்துள்ளார். காவல் துறையினர் வசம் சிக்காமல் இருக்க காவல் நிலையத்திலும் போலியான புகார் வழங்கிய நிலையில், விசாரணைக்கு பின்னர் சிக்கிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்" என்பது அம்பலமாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் வனப்பகுதியில் பிணமாக இருந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், திலீப்பின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.