மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதில் அறுவை சிகிச்சை.. ப்ளூடூத் பொருத்தி எம்.பி.பி.எஸ் தேர்வில் பாஸ் ஆக முயற்சி.. சிக்கிய இளைஞர்..!
மருத்துவ படிப்புகளுக்கான தேர்வில் அரியர் தேர்வெழுதிய மாணவர், காதில் ப்ளூடூத்தை அறுவை சிகிச்சை செய்து பொருத்தி மோசடியில் ஈடுபட்டு சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரியில், அரியர் தேர்வுகள் நடைபெற்றுள்ளது. கடந்த 11 வருடமாக அரியர் தேர்வெழுதும் மாணவர், இம்முறை இறுதி வாய்ப்பு என்பதால் எப்படியாவது தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
இதனையடுத்து, சரும அறுவை சிகிச்சை நிபுணர் உதவியுடன் தனது காதுகளில் ப்ளூடூத்தை பொருந்தியவர் தேர்வு எழுதிக்கொண்டு இருந்துள்ளார். அவரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நிலையில், பறக்கும்படை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்துள்ளனர்.
அப்போது, அவரின் உள்ளாடையில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட செல்போன் மீட்கப்பட்ட நிலையில், அது ப்ளூடூத்துடன் இணைப்பில் இருந்துள்ளது. அவரிடம் ப்ளூடூத்தை தேடியபோது காணாத நிலையில், அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர் உண்மை அம்பலமாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.