#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாடே அதிர்ச்சி..! பேருந்தில் இளம்பெண் கதறக்கதற கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. ஓட்டுநர், நடத்துனர், கிளீனர் துணிகரம்..!
பேருந்தில் பயணம் செய்த பெண்ணை நடத்துனர், ஓட்டுநர், கிளீனர் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பேரதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் மாவட்டம், மண்வார் லோகாச்சாரி பகுதியில் இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் குக்ஷி நகரில் இருந்து மண்வார் நகர் நோக்கில் செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
இவர் தனது பேருந்து நிறுத்தமான லோகாச்சாரி நிறுத்தத்தில் இறங்கவிருந்த நிலையில், பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் அங்கு பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி கேள்வி எழுப்புகையில், கண்டவாணி பகுதியில் தான் பேருந்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பெண்ணும் அமைதியாக பயணம் செய்த நிலையில், பேருந்து லோகாச்சாரியை அடுத்துள்ள நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்துஇறங்கிவிட, பெண்மணி மட்டும் தனியே பயணித்துள்ளார்.
அப்போது, நடுவழியில் பேருந்தை நிறுத்திய நடத்துனர், பெண்ணை பேருந்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோரும் அத்துமீற முயற்சிக்க, பெண் அபயக்குரல் எழுப்பி அலறியுள்ளார். இதனைக்கேட்டு பதறிப்போன பொதுமக்கள் பேருந்திற்குள் வந்துள்ளனர்.
சுதாரித்தவர்கள் பேருந்தின் ஓட்டுனரை பிடித்து அடித்து நொறுக்கியுள்ளனர். நடத்துனர் மற்றும் கிளீனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து, பெண்மணி சம்பவ தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வாக்குமூலத்தின் பேரில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்ட நிலையில், பேருந்தின் கிளீனருக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.