மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு வெடித்து பயங்கர விபத்து; 4 பேர் பரிதாப பலி.!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரேனோ மாவட்டம் பன்மோர் நகரில் உள்ள வீட்டில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சம்பவ இடத்திலேயே 4 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். இதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில், சிலர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக மொரேனோ மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "இந்த சம்பவம் வெடிமருந்தால் வெடித்ததா? அல்லது எரிவாயு சிலிண்டர் வெடித்ததா? என்பது குறித்து விசாரித்து வருகின்றோம். காயமடைந்தவர்கள் அனைவரும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இடிபாடுகளை அகற்ற இயந்திரங்கள் மற்றும் ஆட்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றதாக காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.