மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியை வீடுபுகுந்து பலாத்காரம் செய்த காமுகன்.. மனமுடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தாமோ மாவட்டத்தில் தனது பெற்றோருடன் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் உறவினரின் வீட்டில் நடந்த சுபநிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர்.
அச்சமயம் வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்துகொண்ட அதே கிராமத்தைச் சார்ந்த இளைஞர், சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷம் அருந்தி இருக்கிறார். சிறுமியை கண்ட அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது உண்மை தெரியவரவே, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த பெற்றோர் சிறுமியிடம் நடந்ததை கேட்டறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து இளைஞரை தேடி வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.