மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலை விபத்தில் பரிதாபம்.. திரைப்பட பாணியில் உருண்டு கார் விபத்து.. காவல் அதிகாரி, மகள், மனைவி 3 பேர் மரணம்.!
குடும்பத்தினருடன் சென்ற காவல் உதவி ஆய்வாளரின் கார் விபத்திற்குள்ளாகி 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குணா மாவட்டத்தை சேர்ந்தவர் கிஷான் சிங் பரியா (வயது 65). இவரின் மனைவி மம்தா பரியா (வயது 58). தம்பதியின் மகள் வித்யா கடிலா (வயது 45). கிஷான் அம்மாநில காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
அவர் சமீபத்தில் மண்ட்சுர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் தனது மனைவி, மகள் உட்பட உறவினர்கள் 12 பேருடன் குணா மாவட்டத்தில் பயணம் செய்தபோது, அவர்களின் வாகனம் திடீரென விபத்தில் சிக்கியது.
சாலையில் சென்று கொண்டு இருந்த லாரியின் மீது அதிவேகத்தில் மோதி நிலைதடுமாறி வாகனம், 3 முறை உருண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காவல் உதவி ஆய்வாளர், அவரின் மனைவி, மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு, காயமாதந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.