மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2 நாட்கள் 30 வயது பெண்ணை அடைத்து வைத்து., 3 பேர் கும்பல் வெறிச்செயல்.. கணவரிடம் கதறியழுத மனைவி.!
30 வயது இளம்பெண்ணை 3 பேர் கும்பல் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பேரதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டம், தப்ரா தெஹ்சில் கிராமத்தில் 30 வயதுடைய பெண்மணி தனது கணவருடன் வசித்து வருகிறார். கணவர் உள்ளூரில் நடைபெற்ற குற்ற வழக்கில் சிக்கியிருந்த காரணத்தால், கடந்த மாதம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கணவரின் மீது அலாதி அன்பு வைத்திருந்த மனைவி, சிறையில் இருக்கும் தனது கணவரை பார்க்க ஆசைப்பட்டுள்ளார். இதனையடுத்து, கணவரின் உறவினரான இளைஞர் ஒருவரிடம் சிறையில் தவிக்கும் கணவரை பார்க்க வேண்டும் என பெண்மணி கூறியுள்ளார். அவரும் உதவி செய்வது போல நடித்து 2 முறை பெண்ணை சிறைக்கு அழைத்து சென்று கணவரை காண வழிவகை செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி பெண்ணை சிறை வளாகத்திற்கு அழைத்து சென்ற இளைஞர், திரும்பி வரும் வழியில் தனது வீட்டிற்கு வந்துவிட்டு செல்லுங்கள். அம்மா, அப்பாவை பார்த்துவிட்டு செல்லலாம் என்று அழைத்துள்ளார். அவனின் பேச்சில் உள்ள நயவஞ்சக எண்ணத்தை அறியாத பெண்மணி, சற்றும் யோசிக்காமல் சரி என்று கூறியுள்ளார்.
வீட்டிற்கு பெண்ணை அழைத்து சென்ற காமுகன், கத்தி முனையில் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், அவனின் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து, 2 நாட்கள் அடைத்து வைத்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள். 13 ஆம் தேதி அவர்களின் பிடியில் இருந்து தப்பிய பெண்மணி, கணவரை நேரில் சந்தித்து நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து, கணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்சொல்லி அறிவுறுத்தி அனுப்பி வைக்கவே, பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளுக்கு வலைவீசியுள்ளனர்.