திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#வீடியோ: மனுஷனாடா நீயெல்லாம்?.. நாயை கொடூர கொலை செய்த சைக்கோ .! பதைபதைப்பு வீடியோ.!!
மகனை நாய் கடித்ததால், சர்ஜிக்கல் கத்தியை எடுத்து வந்து நாயை பதைபதைக்க அறுத்து கொலை செய்த மருத்துவரின் பகீர் வீடியோ வைரலாகியுள்ளது.
மனிதர்கள் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு தீங்கு ஏற்படும் போது, அவர்களின் தீங்குக்கு பழிவாங்க எண்ணி பெரும் கொடூரம் படைத்த மனதுடையவர்களாக மாறிவிடுகிறார்கள். அவ்வாறு அவர்களின் பொறுமை குணம் இழக்கப்படும் போது, இரணகொடூரமான துயர சம்பவமும் நிகழ்கிறது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நாய் ஒன்றை மனிதர் துள்ளத்துடிக்க வெட்டி படுகொலை செய்யும் பதைபதைப்பு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ குறித்த தகவலின்படி, அது மத்திய பிரதேசம் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
Madhya Pradesh: A doctor killed a stray dog with a knife after the dog bit his son in Dabra tehsil, Gwalior. A video of the incident has surfaced on social media. pic.twitter.com/EPOF15jcfX
— Free Press Journal (@fpjindia) November 29, 2021
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டம் டாப்ரா டெஹஸில் பகுதியை சார்ந்த மருத்துவரின் மகனை தெரு நாய் பலமாக கண்டித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர், அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கத்தியை எடுத்து வந்து நாயை இரணகொடூரமாக வெட்டி கொலை செய்யும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.