செல்போனை கைவிட்டு சாப்பிட கண்டித்த பெற்றோர்: 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை..! 



Madhya Pradesh Indore 10th Class Girl Suicide 

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர், கரீனா நகரில் 16 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி எப்போதும் தனது செல்போனை உபயோகம் செய்தவாறு இருந்துள்ளார். 

சம்பவத்தன்று சாப்பிடும்போதும் சிறுமி செல்போனை உபயோகம் செய்ததால், பெற்றோர் சிறுமியை கண்டித்து இருக்கின்றனர். 

மேலும், செல்போனை கீழே வைத்துவிட்டு சாப்பிடுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்துபோன சிறுமி, செல்போனை வீசிவிட்டு சாப்பிடாமல் வீட்டின் மேல்தளத்திற்கு சென்றுள்ளார். 

மகள் நீண்ட நேரம் ஆகியும் சாப்பிட வரவில்லையே என பெற்றோர் உணவை எடுத்துக்கொண்டு மேல்தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது, மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

பின், இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.