மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலன் பேச மறுத்தால் 2 மாணவிகள் தற்கொலை; ஒருவர் கவலைக்கிடம்... ஊர்விட்டு ஊர் சென்று சிறுமிகள் விபரீதம்.!
சமூக வலைதளத்தில் அறிமுகமான காதலன் பேச மறுத்தால் சிறுமி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருடன் பயணித்த 2 சிறுமிகளும் தற்கொலைக்கு முயற்சித்து ஒருவர் உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிஹார் மாவட்டம், அஸ்தா நகரில் செயல்பட்டு வரும் பள்ளியில் 3 மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் நேற்று முந்தினம் பள்ளிக்கு செல்லாமல் பேருந்து மூலமாக இந்தூருக்கு பயணம் செய்துள்ளனர். அங்கு சமூக வலைத்தளம் மூலமாக அறிமுகமான காதலரை ஒருமாணவி சந்திக்க சென்ற நிலையில், அவர் மனைவியுடன் பேசாமல் இருந்து வந்ததாக தெரியவருகிறது.
அவரை சந்திக்க மாணவி தனது தோழியுடன் இந்தூர் சென்றுள்ளார். மூவரும் இந்தூர் சென்று மாணவியின் காதலனுக்கு தொடர்பு கொண்டபோது, அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்கிடையே, மற்றொரு மாணவி தனக்கு குடும்ப பிரச்சனை இருக்கிறது என்பதால் நானும் தற்கொலை செய்கிறேன் என்று தெரிவிக்க, நெருங்கிய தோழிகள் இருவரும் உயிரைமாய்ப்பதால் நாம் மூவருமாக இறந்துவிடலாம் என திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து, பூங்காவுக்கு சென்ற மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து உயிருக்கு போராட, அவர்களை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேர் உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவி கவலைக்கிடமாக இருக்கிறார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.