மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
65 வயது மூதாட்டியை தள்ளிவிட்டதால் சோகம்: சுருண்டு விழுந்து பலியானதால் கொலை கேசில் சிக்கிய இளைஞர்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியில், 35 வயதுடைய நபர் வாக்குவாதம் முற்றி பெண்ணை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள முஸக்ஹெடி, சாந்தி நகரில் வசித்து வரும் பெண்மணி, கடைக்கு வந்துவிட்டு பின் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார்.
இரவு 10:30 மணியளவில், அப்பகுதியில் சென்ற நபரை பார்த்து நாய் குரைத்து இருக்கிறது. தொடர்ந்து நாய் குரைத்துக்கொண்டு இருந்ததால், அவரால் அப்பகுதியை கடந்து செல்ல இயலவில்லை.
நாயின் உரிமையாளரான 65 வயது பெண்மணி, வெளியே வந்து தனது நாயை கண்டித்து இருக்கிறார். இதனை கவனித்த நபர், மூதாட்டியிடம் வாக்குவாதம் செய்தவாறு, அவரை கீழே தள்ளி உதைத்துள்ளார்.
கீழே விழுந்து மயங்கிய பெண்ணை மீட்ட அக்கம் பக்கத்தினர், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பெண்ணை கொலை செய்ததாக 35 வயது நபரை கைது செய்தனர்.