மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகள் கண்முன்னே கொடூரமாக கொலை செய்யப்பட்ட தாய்.. பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சி.!!
தாய் அவரின் காதலனால் மகள் கண்முன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர், பன்வர்குவான் பகுதியை சார்ந்த பெண்மணி சங்கீதா என்ற வெஜயந்தி (வயது 27). இவருக்கு திருமணம் முடிந்து 9 வயதில் மகள் மற்றும் கணவர் இருக்கிறார்.
இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் தாயும் - மகளும் காய்கறிகள் வாங்க சென்று கொண்டு இருந்த நிலையில், அங்கு வந்த வினோத் என்ற நபர் சங்கீதாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். மகளின் கண்முன்னே தாய் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், கொலையான பெண்மணி சங்கீதாவின் காதலர் வினோத் என்பவர் அவரை கொலை செய்தது அம்பலமானது. இதனால் வினோத்தை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
வினோத் கைதான பின்னரே இது கள்ளகாதலுக்காக நடந்த கொலையா? அல்லது சங்கீதாவின் முன்னால் காதலர் வினோத்தா? என்ற உண்மை தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.