மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்புகையில் சோகம்... லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் பலி., 40 பேர் படுகாயம்.!
சொந்த ஊரில் தீபஒளியை கொண்டாட நினைத்து பேருந்தில் பயணம் செய்தவர்களில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூருக்கு இன்று மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து 100 பயணிகளை ஏற்றுக்கொண்ட பேருந்து பயணம் செய்தது. இந்த பேருந்து மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரோவாவில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியின் மீது பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பலரும் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வெவ்வேறு இடங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்கள் குழுவாக தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் ஹைதராபாத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
தற்போது தீப ஒளிப்பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்த நிலையில், 100 பேர் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது, பேருந்து மத்திய பிரதேசம் பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளிக்காக தங்களது வீட்டு உறவுகளின் வருகைக்காக காத்திருந்த குடும்பத்தினருக்கு விபத்து சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..