மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உல்லாசத்திற்கு மறுத்த லிவிங் டுகெதர் காதலி: கத்தரிக்கோலால் கழுத்திலேயே குத்தி கொடூர கொலை.!
வாழ்க்கைத்துணையை தேர்வு செய்யும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய உலகின் எண்ணங்கள் மாறி வருகின்றன. அதனை புரிந்து செயல்படாத பட்சத்தில், வரும் இழப்பை கட்டாயம் ஏற்றுக்கொள்வதே இறுதி தீர்ப்பாகவும் அமையலாம்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குணா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் சிங் (வயது 24). இந்தூர் பகுதியில் 20 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இன்ஸ்டாகிராம் செயலி வழியே நட்பு ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். இதனைதொடர்ந்து, இருவரும் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து பழகிப்பார்களாம் என பேசியுள்ளனர்.
இதனையடுத்து, கடந்த டிசம்பர் 07ம் தேதி நண்பர்கள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கின்றனர். இந்நிலையில், மறுநாளில் இருந்து இவர்களின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கவே, இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 20 வயதுடைய இளம்பெண் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்யப்பட்டவாறு இரத்தம் வெளியேறி சடலமாக கிடந்தார்.
பெண்ணின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்த விசாரணையில் இறங்கிய காவல் துறையினர், பெண்ணின் லிவிங் டுகெதர் காதலை கண்டறிந்தனர்.
இதனையடுத்து, கொலையை செய்து தலைமறைவான பிரவீனை தூக்கிய அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சம்பவத்தன்று வீடு எடுத்து காதல் ஜோடி தங்கி இருந்துள்ளது.
அப்போது, லிவிங் டுகெதர் என அழைத்த காதலன், முதல் நாளே உடலுறவுவு மேற்கொள்ள வேண்டுகோள் வைத்துள்ளார். இதில் விருப்பம் இல்லாத பெண்மணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அங்கு வாக்குவாதம் நடைபெறவே, ஆத்திரத்தில் உல்லாசத்திற்கு மறுத்ததால் பெண்ணை கொலை செய்து பிரவீன் சிங் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். உண்மையை கண்டறிந்த காவல் துறையினர் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.