மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்ற தாயை கதறக்கதற கிரிக்கெட் பேட், இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற மகன்.! சொத்துக்காக வெறிச்செயல்.!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் பெற்றெடுத்த தாயை தனது மனைவியுடன் சேர்ந்து இளைஞர் ஒருவர் இரும்பு பைப் மற்றும் பேட் கொண்டு அடித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள கிருஷ்ணகஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெண்மணி ரவாதிபாய் லில்லூர் (வயது 64). இவர் தனது மகன் ராஜேந்திர லில்லூர் மற்றும் மருமகள் ரேகா ஆகியோருடன் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே தனது அம்மாவின் பெயரில் இருக்கும் சொத்துக்களை மகன் எழுதி கேட்டு பிரச்சினை செய்ததாக தெரியவருகிறது. ஆனால் தாய் சொத்துக்களை மாற்றி கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கிரிக்கெட் பேட் மற்றும் இரும்பு பைப் கொண்டு ரவாதிபாயை கடுமையாக அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட தனது தாயை அவரது மகள் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து ரவாதிபாயின் மகள் காவல் நிலையத்தில் புகாரளித்ததை தொடர்ந்து ராஜேந்திரா மற்றும் அவரது மனைவி ரேகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.