கோவில் சுற்றுச்சுவர் இடிந்து 9 பேர் பலியான விவகாரம்; பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.. நிதிஉதவி அறிவிப்பு.!



Madhya Pradesh Sagar Wall Collapse PM regret 


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில், பாபா கோவில் ஒன்றில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்ச்சியின்போது, கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுற்றுச்சுவர் அருகே இருந்த 9 சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 சிறார்கள் படுகாயம் அடைந்தனர். 

கடந்த சில வாரங்களாக அம்மாநிலத்தில் தொடர் மழை பெய்து வந்த நிலையில், பழமையான கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை பாதித்து சுற்றுச்சுவர் விழுந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கோவில் இடிந்து விழுந்து சிறுவர்கள் பலியானதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில், சுவர் இடிந்து விழுந்த சம்பவம் நெஞ்சை பதறவைக்கிறது. இந்த துயரத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இவ்வலியை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். காயமடைந்தவர்களுக்கு குணமடைய வேண்டுகிறேன்" என தெரிவித்தார். 

இதையும் படிங்க: கோவில் வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்து சோகம்; 9 பேர் பரிதாப பலி.!

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 இலட்சம் பிரதமரின் நிதியில் இருந்து வழங்கப்படும். காயமடைந்த சிறார்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் பிரதமரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கோவில் வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்து சோகம்; 9 பேர் பரிதாப பலி.!