#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலியை 2 நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து., விஷம் கொடுத்து கொன்ற காதலன்.. பேரதிர்ச்சி சம்பவம்.!
நண்பன் போல பெண்ணிடம் பழகி சுற்றுலா அழைத்து சென்ற கயவன், நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்து கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹவ்ஷங்காபாத் மாவட்டம், செஹாக்பூர் பகுதியில் 28 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவருடன், அப்துல் உஸ்மானி என்ற இளைஞர் பழகி வந்துள்ளார். பின்னாளில் காதலித்தாகவும் தெரியவருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அப்துல் உஸ்மானி பெண்ணை சுற்றுலா சென்று வரலாம் என்று அழைத்துள்ளார்.
முதலில் பெண் சுற்றுலா செல்ல மறுப்பு தெரிவிக்கவே, காதலன் அன்புடன் அழைக்கிறேன் வர இயலாதா? என கயவன் நல்லவன் போல பெண்ணை ஏமாற்றி அழைத்து இருக்கிறார். பின்னர், பெண் சுற்றுலா செல்ல ஒப்புக்கொண்ட நிலையில், அப்துலின் கூட்டாளி ராஜேஷ் சிங் மற்றும் விவேக் ஆகியோருடன் அனைவரும் காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து பெண்ணை ஷிஹிரசாகர் பகுதிக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு மூவரும் சேர்ந்து பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து, அவரின் வாயில் வலுக்கட்டாயப்படுத்தி கொடுத்து தப்பி சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்மணி பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தனது மரண வாக்குமூலத்தை பதிவு செய்தவாறு பெண் உயிரிழக்கவே, இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி அப்துல் உஸ்மானி, ராஜேஷ் சிங், விவேக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அப்துல் உஸ்மானியின் வீடு சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் கட்டப்பட்டு இருந்த நிலையில், அதனை அதிகாரிகள் அதிரடியாக இடித்து தரைமட்டமாக்கினர்.