மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போன் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்; அதிரடி ஆஃபரால் படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்...!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அசோக் நகர் பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருபவர் அபிஷேக். இவர் செல்போன் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு தற்போது நூதன விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, தனது கடையில் செல்போன் வாங்குவோருக்கு 1 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவரின் கடைக்கு சென்ற சில வாடிக்கையாளர்களும் செல்போன் வாங்கி, தக்காளியை பரிசாக பெற்று சென்றுள்ளனர்.
கடந்த சில வாரமாகவே இந்தியாவின் பரவலான மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி உட்பட அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்ந்து வரும் நிலையில், வடமாநிலத்தில் தக்காளியின் விலை ரூ.160 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.