திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆசிரியை தண்ணீர் கேனில் சிறுநீரை நிரப்பி வைத்த விஷமிகள்; தாகத்தில் தவித்த ஆசிரியைக்கு பேரதிர்ச்சி.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி சொல்லப்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 35 வயதுடைய ஆசிரியை பணியாற்றி வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் அவருக்கு தாகம் எடுத்துள்ளது.
இதனையடுத்து, வகுப்பறையில் இருந்த குடிநீர் கேனில் இருந்த நீரை எடுத்து அவர் குடித்தபோது, ஒருவிதமான வித்தியாசம் தென்பட்டுள்ளது.
உடனடியாக அதனை எடுத்துக்கொண்டு சக ஆசிரியர்களிடம் கொடுக்கையில், அதில் சிறுநீர் இருந்தது உறுதியானது.
இதனால் அதிருப்தியடைந்த ஆசிரியை செய்வதறியாது தவித்த நிலையில், தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்றுள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.