மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
20 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்: ஓடும் பேருந்தில் நடந்த அவலம்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து, இராஜதாசன் மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி தனியார் பேருந்து பயணம் செய்துள்ளது. இந்த பேருந்தில் ஓட்டுநர் மற்றும் கிளீனராக ஆரிப் & லலித் என்பவர்கள் பணியாற்றி வந்தனர்.
இவர்களின் வாகனம் உத்திரபிரதேசம் மாநிலம் வழியே பயணித்தபோது, பேருந்தில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி, பயணியாக வந்த 20 வயது இளம்பெண்ணை ஓட்டுநர் மற்றும் கிளீனர் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பயணிகள் விசாரித்தபோது உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மக்களிடம் சிக்கினால் நொறுக்கிவிடுவார்கள் என்ற பயத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி ஆரிப்பை கைது செய்தனர். லலித் தேடப்பட்டு வருகிறார்.