திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; தாய்முன் அரை நிர்வாணமாக சிறுமி.. ம.பி-யில் மற்றொரு கொடூரம்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன், ஜஹார்தா பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுமியை, அதே கிராமத்தை சேர்ந்த நபர் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர் உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், சிறுமியும் ஏதேனும் சிறு வேலையாக இருக்கலாம் என உடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், சிறுமியை தனது வீட்டிற்குள் வைத்து பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன், அரைநிர்வாணத்துடன் அப்படியே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு சென்று தாயிடம் நடந்ததை கேட்டு கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் தாய் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். அவர் மதுபோதையில் சிறுமியை சீரழித்தது தெரியவந்துள்ளது. போக்ஸோ சட்டத்தின் கீழ் அதிகாரிகள் வழக்குப்பதிந்து, குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.