தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அதிவேக பயணம், சடன் பிரேக்.. ஸ்கூல் வேன் மரத்தில் மோதி விபத்து.. ஓட்டுநர் பலி, 18 மாணவ - மாணவிகள் படுகாயம்.!
பள்ளி மாணவ - மாணவிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த வேன், அதிவேகமாக சென்று திடீரென பிரேக் அடித்ததால் விபத்து ஏற்பட்டு ஓட்டுநர் பலியாகினர். 18 மாணவ - மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன், சந்தேசரா பகுதியில் மதர்லேண்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் 20 மாணவர்கள் விக்ரம் நகர், தட்ரவாடா மற்றும் காந்தி நகர் பகுதியில் இருந்து வருகை தருகின்றனர். இவர்களை பள்ளிக்கு அழைத்து வரவும், வீட்டிற்கு கொண்டு சென்று விடவும் பள்ளியின் சார்பில் வேன் வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று காலை மாணவ - மாணவிகளை வழக்கம்போல வேனில் பள்ளிக்கு அழைத்து வந்த நிலையில், மாலையில் மீண்டும் மாணவ - மாணவிகளை வீட்டிற்கு அழைத்துச்செல்ல வேன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்போது, தட்ரவாடா பகுதியில் உள்ள தேவாஸ் சாலையில் வேன் சென்றுகொண்டு இருந்தது.
மாணவ - மாணவிகள் வேனிற்குள் இருந்த நிலையில், அதிவேகத்தில் ஓட்டுநர் வேனை இயக்கியுள்ளார். அந்த சமயத்தில், திடீரென பிரேக் பிடிக்கவே, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வேனில் சம்பவத்தன்று பயணம் செய்த 18 மாணவர்களும் காயமடைந்த நிலையில், உயிருக்கு போராடி அலறித்துடித்தனர். அவ்வழியே சென்ற மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு மாணவ - மாணவிகளை மீட்டனர். மேலும், காவல் துறையினருக்கும், அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்த மாணாக்கர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியரும் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்று, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்தார். அதிவேகத்தில் பயணித்து திடீரென பிரேக் போட்டதே விபத்திற்கு காரணம் என வேனில் பயணித்த மாணவி தெரிவித்தார்.