மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: 60 ஆடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு.. 30 மணிநேர போராட்டம் தோல்வியடைந்த சோகம்.!
43 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றுக்கு இடையே சிக்கிக்கொண்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள விதிஷா மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் லோகேஷ் (வயது 8), அங்குள்ள 60 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். சிறுவன் ஆழ்துளை கிணற்றில் 43வது அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுப்பட்டனர். மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டு, சிறுவனுக்கு ஆக்சிஜன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
மீட்பு பணிகளில் தேசிய மீட்பு படையினரும் நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன. சுமார் 30 மணிநேரத்தை கடந்து நடந்த மீட்பு பணியில், இறுதியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
சிறுவனின் குடும்பத்திற்கு அம்மாநில அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.4 இலட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.