மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லிவிங் டுகெதர் காதலியை கற்பழித்து கழட்டிவிட்ட யூடியூபர்: அதிரடி காண்பித்த காவல்துறை.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர், மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மதிலேஷ் அகர்வால். இவரின் மகன் ராபின் ஜிந்தால் (வயது 35).
இவர் Oye Indori என்ற சமூக வலைதளப்பக்கத்தை நிர்வகித்து வருகிறார். பல காமெடி வீடியோ வெளியிட்டு 4 மில்லியன் அளவிலான பின்தொடர்பாளர்களை கொண்டவர் ஆவார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்ஐஜி பகுதியில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி, அங்கு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அச்சமயம், அவருக்கும் - இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திருமண ஆசை காண்பித்து பெண்ணிடம் அத்துமீறியதாகவும் தெரிகிறது. இதனிடையே, கடந்த வாரத்தில் வேறொரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளார். அங்குள்ள ஹோட்டலில் இந்நிகழ்வும் நடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த காதலி ராபினிடம் கேள்வி எழுப்பியபோது, சரியான பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து, பெண்மணி ராபினுக்கு எதிராக காவல் நிலையத்தில் பலாத்கார புகார் வழங்கினார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் ராபினுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.