மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் இரயிலில் பெண் பலாத்கார முயற்சி.. கதறக்கதற நடந்த பயங்கரம்.. கொடூரனின் கொலை முயற்சியால் ஊசலாடும் உயிர்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்திற்கு, உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் 20 வாரமாக வந்து செல்கிறார். சத்தர்பூரில் இருக்கும் கோவிலில் 21 செவ்வாய்க்கிழமை வழிபட்டால் நன்மை நடக்கும் என்பது ஐதீகம் என்பதால், வாராவாரம் வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், 21 ஆவது வார வழிபாட்டுக்காக வந்த பெண்மணி, கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். சத்தர்பூர் இரயில் நிலையத்தில் மகோபா அதிவிரைவு வண்டியில் பயணத்தை தொடங்கியுள்ளார். இரயிலில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தளவே இருந்துள்ளது.
பெண்மணி இருந்த பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாத நிலையில், மாலை 05:15 மணியளவில் புறப்பட்ட இரயிலில் இளைஞர் திடீரென வந்து ஏறியுள்ளார். இரயிலில் பெண் தனியே பயணிப்பதை புரிந்துகொண்ட காமுகன், பெண்ணை தவறான சைகையில் அணுகி இருக்கிறான். அதனை பெண்மணி கண்டுகொள்ளாத நிலையில், வலுக்கட்டாயமாக இழுத்து பலத்காரம் செய்ய முயற்சித்துள்ளான்.
இதனால் பதறிப்போன பெண்மணி வாலிபனை பளார் என அடித்துவிட, அடுத்த பெட்டிக்குள் செல்ல முயற்சித்துள்ளார். அங்கும் யாரும் இல்லாத நிலையில், இளம்பெண்ணை விரட்டி இருக்கிறான். இறுதியில் பெண்ணை பலாத்காரம் செய்யும் முயற்சியில் இறங்கவே, பெண்மணி வாலிபனின் கைகளை கண்டித்துள்ளார். இதனால் அவனின் கையில் இருந்து இரத்தம் வழிய, ஆத்திரத்தில் கயவன் பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளான்.
நிலைகுலைந்த பெண்மணி காப்பாற்றக்கூறி அறவே, கயவன் ஓடும் இரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்து இருக்கிறான். பெண் கதறியவாறு கம்பியை பிடித்து தொங்க, அவரை ஓங்கி மிதித்தால் பெண் ஓடும் இரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அவரின் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்படவே, இரயில்வே தொழிலாளி பெண் மயக்க நிலையில் இருப்பதை பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அடுத்த இரயில் நிலையத்தில் கையில் காயத்துடன் இறங்கி ஓடிய கயவனுக்கு சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் வலைவீசப்பட்டுள்ளது.