மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உறவினர் உங்களின் குழந்தைக்கு போன் கொடுக்கிறாரா?.. பெற்றோர்களே உஷார்.. 4 வயது சிறுமி பலாத்காரம்..!!
4 வயது சிறுமியை கயவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள காந்துவா மாவட்டத்தை சார்ந்த 22 வயது நபர் ரெஸ்டாரன்ட் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் ஒருவரின் குழந்தைக்கு அவ்வப்போது இவர் செல்போனை காண்பித்து மகிழ்விப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று பச்சிளம் குழந்தை மாயமாகவே, அதனை தேடியலைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட 22 வயது நபரும் மாயமான நிலையில், சிறுமியை அவர் கடத்தி சென்றார் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
அவர் தலைமறைவாகிய காரணத்தால் தனிப்படை அமைத்தும் அதிகாரிகள் அவரை தேடிவந்த நிலையில், சிறுமி உடலில் ரத்தகாயத்துடன் அங்குள்ள சாலை ஓரத்தில் இருந்து மீட்கப்பட்டார். பின் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
அத்துடன் விசாரணை செய்ததில், சிறுமியை அவரது உறவினரான ரெஸ்டாரண்டில் பணியாற்றி வரும் நபர் செல்போன் கொடுப்பதாக கூறி பலாத்காரம் செய்தது அம்பலமானது. மேலும், குற்றவாளி ராஜ்குமார் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.