மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நித்தியானந்தாவின் கைலாசாவில் இந்த பிரபல ஹோட்டலா? மதுரை தொழிலதிபர் விடுத்த பலே கோரிக்கை!
நித்தியானந்தா சமீபத்தில் ஒரு புதிய இறையாண்மை தேசத்தை உருவாக்குவதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார். கைலாசா நாட்டுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர் வரும் அதனை விநாயகர் சதுர்த்தியன்று அறிமுகம் செய்வதாக கூறியிருந்தார்.
அதற்கு தமிழில் பொற்காசுகள், ஆங்கிலத்தில் கைலாஷியன் டாலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் பெயர் வைத்தார். இந்நிலையில், சமூகவலைதளத்தில் கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை இன்று நித்யானந்தா அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதனிடையே தொழிலதிபர் ஒருவர் நித்யானந்தாவுக்கே குறும்பான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது பிரபலமான மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளரும், மதுரை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான குமார்
கைலாச நாட்டில் தனது டெம்பிள் சிட்டி ஹோட்டலின் கிளையை நிறுவ நித்யானந்தா அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்தக் கோரிக்கையை நேரடியாக நித்தியானந்தாவிடம் தெரிவிக்க முடியாததால், தனது கோரிக்கையை செய்தி மூலம் நித்யானந்தா நாளை காலை அறிந்து கொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.