திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரு மேகி நூடுல்ஸ் விலை ரூ.193 ஆ?.. எங்கு தெரியுமா?, காரணம் இதுதானாம்.!
இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள், மால்களில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பொருளின் விலையும் நடுத்தர வர்க்கத்தினர் பதறும் வகையிலேயே இருக்கும்.
சிறிய அளவிலான சாக்லேட்டில் இருந்து உணவு பொருட்கள் வரை அவற்றின் விலை அதிகமாக இருக்கும். விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலை என்பது மிகவும் உச்சத்தில் இருப்பது பலரும் அந்த விஷயம்.
முதல் முறையாக விமான நிலையங்களுக்கு செல்லும் சிலர், விமான பயணத்திற்காக காத்திருக்கும்போது பசியின் காரணமாக சில நேரம் உள்ளேயே வாங்கி சாப்பிடும் நிலை ஏற்படலாம்.
இந்த நிலையில், சமீபத்தில் விமான நிலையத்திற்கு சென்றிருந்த நபரொருவர், மேகி நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டு அதன் விலையை கேட்டு அதிர்ந்துள்ளார். அதாவது, ஒரு மேகி நூடுல்ஸின் விலை ரூ.193 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் பில் தொகையையும் அவர் பகிர்ந்துள்ளார். கடைகளில் ரூ.10க்கு விற்பனை செய்யப்படும் மேகியை சமைத்து கொடுத்து, ஜி.எஸ்.டி வரியுடன் ரூ.193 க்கு விற்பனை செய்துள்ள பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.